Menaka Mookandi / 2011 மார்ச் 18 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
யாழ். பாதுகாப்பு படைகளின் தலைமையகம் குடா நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கும் ஏனைய பொதுமக்களுக்கும் 80 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை நேற்று வியாழக்கிழமை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
சிவில் இராணுவ கூட்டுறவு திட்டத்தின்கீழ் நன்கொடை நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் உதவியுடன் அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகளை வழங்கி வருவதாக யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின்கீழ் உடுவிலை தளமாகக் கொண்ட 513 ஆவது படையணி வட்டுக்கோட்டை, அராலி, சண்டிலிப்பாய், அளவெட்டி, ஆனைக்கோட்டை, மானிப்பாய் பகுதிகளிலுள்ள 10 ஆரம்பப் பாடசாலைகளைச் சேர்ந்த 320 மாணவர்களுக்கு 640 தொகுதி சீருடைகளை வழங்கியது.
இத்திட்டத்திற்காக 513 ஆவது படையணியின் கோரிக்கையின் பேரில் சீதுவையிலுள்ள பிராண்டிக்ஸ் கார்மன்ட்ஸ் நிறுவனம் 5 இலட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கியது.
அத்துடன் ஒவ்வொரு மாணவருக்கும் பாதணிகளும் வழங்கப்பட்டன. இதற்காக கொழும்பு மெற்றோபொலிட்டன் லயன்ஸ் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் போல் பெரேரா ஒன்றரை இலட்சம் ரூபாவை வழங்கியிருந்தார்.
சங்குவேலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு 200 நூல்களும் இரு அலுமாரிகளும் வழங்கப்பட்டன. யாழ் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க இப்பொருட்களை கையளித்தார்.
இராணுவத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்ட 10 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் கொடுப்பனவுகளையும் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க வழங்கினார். அத்துடன் கோழிவளர்ப்புத் திட்டத்திற்காக 25 வறிய குடும்பங்களுக்கு 250 கோழிக்குஞ்சுகள் விநியோகிக்கப்பட்டன.
இது தொடர்பாக மானிப்பாய் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் உரையாற்றிய யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, யாழ் மக்கள் அமைதியான சூழலில் சிறந்த வாழ்கையை வாழ்வதற்கு உதவ இராணுவம் எப்போதும் தயாராக இருப்பதாக கூறினார்.
சமயத் தலைவர்கள், 51 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜனக வெல்கம, விலங்கு உற்பததி மற்றும் சுகாதார பிரதி பணிப்பாளர் திருமதி வி.அமிர்தலிங்கம், பிராண்டிக்ஸ் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு தலைவர் சமல் திசாநாயக்க ஆகியோரும் இதில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025