2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சாவகச்சேரியில் பெண் படுகொலை; சந்தேகநபர்கள் மூவருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2011 மார்ச் 18 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மீசாலை கிழக்கு பகுதியில் கடந்த 6ஆம் திகதி பெண்ணொருவர் வெள்ளை வானொன்றில் கடத்தி செல்லப்பட்டடு பின்னர் படுகொலை செய்யப்பட்டதான சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் இன்று உத்தரவிட்டார்.

சாவகச்சேரி, பெருங்குளம் காட்டுப் பகுதியில் கடந்த 6ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட திருமதி சாந்தினி குகதாசன் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார் என சாவகச்சேரி பொலிஸார் இன்று மன்றில்  தெரிவித்திருந்தனர்.

அதனை அடுத்து சம்பவத்துடன் தெடர்புடைய சந்தேக நபர்கள் மூவரையும் எதீர்வரும் 31ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிபதி ம.கணேசலிங்கம் இன்று வெள்ளிக்கிழமை பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X