2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தண்ணீர் தொட்டியில் தவறி வீழ்ந்து ஒன்றரை வயது குழந்தை பலி

Suganthini Ratnam   / 2011 மார்ச் 22 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். கொடிகாமம் பலாலி தெற்குப் பகுதியில் தாயார் தண்ணீர் அள்ளுவதற்காக கிணற்றடியில் நின்றபோது,  ஒன்றரை வயது நிரம்பிய குழந்தையொன்று தண்ணீர் தொட்டியில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

கொடிகாமத்தைச் சேர்ந்த ருமேந்திரா துளசிகா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இக்குழந்தையின் சடலம் தற்போது  யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

குழந்தையின் மரணம் குறித்து கொடிகாமம்  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X