2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மீசாலையில் எரிந்த நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 22 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மீசாலை வடக்கு எல்லை வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து எரிந்த நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை மாலை சாவகச்சேரி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மிகவும் தீக்காயங்களுடன் கருகிய நிலையில் காணப்பட்ட இச்சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மீசாலை வடக்கை சேர்ந்த சச்சிதானந்தம் உமாபிரியா (வயது 25) என்பவரே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

இது தொடர்பில் பொலிஸார் சாவகச்சேரி நீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல் செய்ததையடுத்து, நீதிவான் மா.கணேசராசா சடலத்தை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி நீதிமன்றத்தில் மருத்துவச் சான்றிதழ்  சமர்ப்பிக்குமாறு சாவகச்சேரி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X