Suganthini Ratnam / 2011 மார்ச் 22 , மு.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
இதுவரையில் உரிமை கோரப்படாத பொருள்கள் பொலிஸாரால் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ். நீதவான் நீதிமன்றப் பதிவாளர் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
உரிமை கோரப்படாத பல ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருள்கள் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் தங்கச்சங்கிலியொன்றும் இரு சைக்கிள்கள் உட்பட பல பொருள்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
யாழ்ப்பாணம், கோப்பாய் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தவறவிடப்பட்ட பொருள்கள் தொடர்பில் சரியான ஆவணங்களை சமர்ப்பித்து நீதிமன்றத்தில் இவற்றை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்தப் பொருள்களை மீளப் பெற்றுக்கொள்ளும் காலப்பகுதி மூன்று மாதமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், இப்பொருள்களை மீளப் பெற்றுக்கொள்ளத் தவறின் அவை ஏலத்தில் விடப்படுமெனவும் யாழ். நீதவான் நீதிமன்றப் பதிவாளர் குறிப்பிட்டுள்ளார்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025