2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாழ் மீனவர் மீது இந்திய மீனவர்கள் தாக்குதல்

Super User   / 2011 மார்ச் 24 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கர்ணன்)

யாழ். வடமராட்சியிலிருந்து நேற்று மாலை மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் இந்திய மீனவர்களால் இன்று வியாழக்கிழமை அதிகாலை தாக்கப்பட்டுள்ளதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசத் தலைவர் எம்.எமிழியாம் பிள்ளை தெரிவித்தார்.

குறித்த மீனவரும் அவரின் உறவினரும் படகொன்றில்  மீன்பிடித்துக்கொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றதாக அவர் கூறினார்.

இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை தமிழக மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்ட யாழ் மீனவர்கள் மூவர் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அவர்கள் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சமாசத் தலைவர் மேலும் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X