Suganthini Ratnam / 2011 மார்ச் 29 , மு.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயமான நகுலேஸ்வரம் கருகம்பனை பகுதியில் கடந்த 31 வருடகால இடைவெளியின் பின்னர் மீள்குடியேறவுள்ள மக்களுக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவுக்கும் இடையில் நேற்று திங்கட்கிழமை சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இடம்பெயர்வைத் தொடர்ந்து காணிகளுக்கான எல்லைகள் அழிக்கப்பட்டுள்ளதுடன் குடிநீர், மலசலகூடம் போன்ற அடிப்படை பிரச்சினைகள் காணப்படுவதால் உடனடியாக குடியேறுவதில் சிரமமுள்ளதாக மாவை சேனாதிராசாவிடம் பொதுமக்கள் தெரிவித்தனர்.
தற்போது மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்ட நகுலேஸ்வரம் கருகம்பனைப் பகுதி மக்கள் தமது காணிகளை துப்பரவு செய்து வருகின்றனர். தமது காணிகளை துப்பரவு செய்ய வரும்போது கூட குடிநீரை எடுத்து வரவேண்டியுள்ளதாகவும் அம்மக்கள் கூறினர்.
இந்த மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் உடனடியாகத் தான் தொடர்புகொண்டு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதுடன், மக்கள் குடியேறத் தொடங்கியதும் நிலையான திட்டங்களை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.
ஏற்கெனவே மீளக்குடியேறிய வித்தகபுரம் இளவாலை வடக்கு, இளவாலை வடமேற்கு மக்களும் இந்த சந்திப்பில் பங்குபற்றினர்.
.jpg)
.jpg)
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025