Suganthini Ratnam / 2011 மார்ச் 29 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். சாவகச்சேரிப் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச் சென்ற நபரொருவருக்கு சாவகச்சேரி நீதிமன்றம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.
மேற்படி நபர் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிக்கொண்டிருந்தபோது சாவகச்சேரிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், சாவகச்சேரி நீதிமன்றத்தில் இன்றையதினம் ஆஜர்படுத்தப்பட்டபோதே இவருக்கான அபராதத் தொகை விதித்து சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேற்படி நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் காரணமாக அபராதமாக 50 ஆயிரம் ரூபாய் செலுத்துமாறும் அவ்வாறு அபராதத் தொகை செலுத்தத் தவறின் மூன்று மாதகால சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடுமென்றும் சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். அத்துடன், உழவு இயந்திரம் தொடர்பாக எதிர்வரும் 5ஆம் திகதி வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படுமெனவும் நீதிபதி கூறினார்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025