2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வடமராட்சி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: நிவாரணம் தருமாறு கோரிக்கை விடுப்பு

Kogilavani   / 2011 மார்ச் 30 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)
வடமராட்சி மீனவர்கள் தமக்கு ஏற்பட்டுள்ள தொழில் பாதிப்புகளினால் தமது ஜீவனோபாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் உடனடியாக அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் நிவாரணங்கள் வழங்க வேண்டும் எனவும் வடமாகாண கடற்தொழிலாளர் சமாசத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடமராட்சி  கடற்பரப்பில் கடந்த 5 மாதங்களாக இந்திய மீனவர்களது அத்துமீறிய அடாவடித்தனங்களினால் தமது தொழில் முற்றாக பாதிப்படைந்துள்ளதாகவும் தமது வாழ்வாதாரம் முடக்கப்பட்டுள்ளதாகவும் இந்நிலையைக் கருத்தில் கொண்டு சம்மந்தப்பட்டவர்கள் தமக்கு நிவாரணங்களை வழங்குதற்கு முன்வரவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X