Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
வடக்கின் வசந்தம் செயற்றிட்டத்தின் கீழ் மீள்குடியேற்றம் இடம்பெறும் பகுதி வீதிகளுக்கும் வீடுகளுக்கும் இலவசமாக மின்சார விநியோகிக்கப்பட வேண்டுமென்பதுடன், இலங்கை மின்சாரசபை பொதுமக்களிடமிருந்து இதற்காக பணம் எதனையும் அறவிடக்கூடாதென யாழ.; மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் உடுவில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
உடுவில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை சுன்னாகம் பொதுநூலக மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த பொதுமகன் ஒருவர் தனது வீட்டுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லையென்பதுடன், மின்சார வசதியை பெற்றுக்கொள்வதற்காக 40,000 ரூபாய் செலுத்துமாறு மின்சாரசபை தெரிவித்தாக கூறினார்.
இந்த நிலையிலேயே யாழ.; மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் இவ்வாறு கூறினார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட சுன்னாகம் மின்சாரசபையின் அத்தியட்சகரிடம் இது தொடர்பான விளக்கத்தை கேட்டறிந்துகொண்ட அவர், அரசாங்கம் மீளக்குடியேற்றும் மக்களினுடைய வீடுகளுக்கு மின்சார இணைப்பை இலவசமாக வழங்க வேண்டுமென்பதுடன், அவர்கள் முதல் ஆறு மாதங்களுக்கு தமது மின் பாவனைக் கட்டணம் செலுத்தத் தேவையில்லையெனவும் தெரிவித்தார்.
இதனை அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளதெனவும் அவர் கூறினார். அத்துடன், எதிர்காலத்தில் மீள்குடியேற்றப் பகுதிகளுக்கான மின் விநியோகத்தை துரிதப்படுத்துமாறு மின்சாரசபை அதிகாரிக்கு அவர் வலியுறுத்தினார்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago