Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
போதைவஸ்துக்கு அடிமையாகியுள்ள யாழ். சிறைக்கைதிகளுக்கு தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டளைச் சட்டத்தின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் புனர்வாழ்வு மற்றும் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு யாழ். சிறைச்சாலை அத்தியட்சகருக்கு, சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான் மா.கணேசராச இன்று செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளார்.
தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச்சபையின் வேண்டுகோளையேற்று சாவகச்சேரி நீதிமன்ற பதிவாளர் ஊடாக உரியமுறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் கூறினார்.
நீதிபதிகளின் பயிற்சிமையத்தின் தலைவர் நீதியரசர் என்.கே.உடலகவிற்கும் இது தெடர்பாக மேற்படி சபையினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago