Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 06 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். நகரப் பகுதியிலுள்ள புடவைக்கடைகள், தேநீர்ச்சாலைகள், பழக்கடைகள், புத்தகக்கடைகள் ஆகியவற்றில் சிறுவர் தொழிலாளர்கள் அதிகரித்துக் காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
யாழ். நகரப் பகுதியிலுள்ள பெரும்பாலான விற்பனை நிலையங்களில் கூலித் தொழிலுக்கு சிறுவர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.
சிறுவர்களின் குடும்ப வறுமையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு பெரும் வர்த்தகர்கள் இவர்களை கூலித் தொழிலாளர்களாக தங்களது விற்பனை நிலையங்களில் வைத்திருக்கின்றனர்.
9 வயது முதல் 13 வயது வரையான சிறுவர்கள் இவ்வாறு கூலித் தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஒரு நாள் ஊதியமாக 150 ரூபாய் வழங்கப்படுவதுடன், கிழமையில் ஏழு நாட்களும் பணியாற்றுவதாகவும் தெரியவருகிறது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தடுப்பு முகாம்களிலிருந்து விடுதலையான சிறுவர்களே கூலித் தொழிலாளர்களாக பணியாற்றுவதாக சமூகஆவலர்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .