Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 06 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். காக்கைதீவு கடற்கரைப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை முதல் அதிகளவான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருவதாக காக்கைதீவு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள அதிகரித்த வெப்பநிலை காரணமாக இம் மீனினங்கள் இறந்திருக்கலாமென்பதுடன், இவ்வாறு இறந்த நிலையில் அதிகளவான மீன்கள் கரையொதுங்குவது இதுவே முதல்த் தடவையெனவும் அப்பகுதி மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
காக்கைதீவுப்பகுதி கடற்கரையோர மக்கள் இவ்வாறு இறந்த நிலையில் கரையொதுங்கிய மீன்களை பார்வையிட்டு வருகின்றனர். இதற்கிடையில், யாழ். மாநகரசபை சுத்திகரிப்பு ஊழியர்கள் இம்மீனினங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவருகிறது.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025