Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 08 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சுகநலச்சங்கம் உருவாக்கப்பட வேண்டுமென்பதுடன், இதனை வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பொறுப்பேற்று நடத்த வேண்டுமென யாழ். மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி வைத்திய கலாநிதி யமுனானந்தா தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு பொதுசுகாதாரப் பரிசோதக மாணவர்களால் தொற்றுநோய்களையும் தொற்றாதநோய்களையும் அறிந்து கட்டுப்படுத்தும் முகமாக சுகாதார விழிப்புணர்வுக் கையேடு இன்று வெள்ளிக்கிழமை காலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் வெளியிடப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல்லாயிரக்கணக்கானோர் வேலையற்ற பட்டதாரிகளாக நாட்டிலுள்ளனர். இவர்களிடம் இவ்வாறான பொறுப்புக்களை வழங்குவதன் மூலம் சுகாதாரத்தை மேம்படுத்த முடிவதுடன், வேலையில்லாப் பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பு கிடைக்கும்.
மேலும் யாழ். மாவட்டத்தில் காசநோய் தடுப்புச் சங்கம், புற்றுநோய் சங்கம், உளநலச் சங்கம், முதலுதவிச் சங்கம், விழி,செவிப்புலச் சங்கம், செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பல அரசசார்பற்ற நிறுவனங்களின் வைத்திய நலன்புரிச்சங்கங்களெனப் பல அமைப்புக்கள் இருந்தும் அவை செயலிழந்த நிலையிலேயே காணப்படுகின்றன.
எனவே, வேலையற்ற பட்டதாரிகளை ஒருங்கிணைத்து எமது இனத்தின் எதிர்கால நலனிற்காக சிறந்த மாவட்ட சுகநலச்சங்கத்தை உருவாக்க வேண்டும் என்றார்.
1 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
21 Dec 2025