Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 08 , மு.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாநகரசபையின் தீயணைப்பு படைப்பிரிவுக்கு புதிய தீயணைப்பு இயந்திரமொன்று கொள்வனவு செய்யப்படவுள்ளதாக யாழ். மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகரசபையின் தீயணைப்பு படைப்பிரிவுக்கு மிகவும் பழமையான இயந்திரங்களே சேவையில் ஈடுபட்டு வந்தன. இவற்றின் பயன்பாடு திருப்திகரமாக இல்லாததால்; புதிதாக தீயணைக்கும் இயந்திரமொன்றை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யாழ். நகரப்பகுதிகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு புதிய தீயணைப்பு இயந்திரம் அவசியமாகவுள்ளது.
எனவே, யாழ். மாநகரசபையின் தீயணைப்பு படையை முழுவினைத்திறனுடன் செயற்பட வைப்பதற்கு சகல வசதிகளும் கொண்ட தீயணைப்புப்படை உருவாக்கப்படுமெனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
4 hours ago