Kogilavani / 2011 ஏப்ரல் 09 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
அண்மையில் யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ள இந்திய மீனவரது சடலத்தை அடையாளம் காண்பதற்காக யாழ். குடாநாட்டிற்கு தமிழ்நாடு இராமேஸ்வரத்தில் இருந்து மீனவக் குடும்பமொன்று இன்று சனிக்கிழமை மாலை வருகை தரவுள்ளதாக யாழ். இந்தியத் துணைத்தூதரகம் அறிவித்துள்ளது
அத்துடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து சடலத்தை இந்தியாவுக்கு கொண்டு செல்வதற்கு யாழ்.துணைத்தூதரகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக யாழ். இந்தியத் துணைத்தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2ஆம் திகதி இராமேஸ்வரத்தில் இருந்து விசைப்படகுகளில் கடலுக்கு சென்ற விக்டர்ஸ் (40), ஜான்பால் (35), மாரிமுத்து (38), அந்தோனி (52) ஆகியோர் கரை திரும்பவில்லை.
இந்நிலையில் நெடுந்தீவு கடற்கரையில் மீட்கப்பட்ட சடலம் இராமேஸ்வரம் மீனவர்கில் ஒருவருடையதாக இருக்கலாம் என யாழ்.பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.
இதனை அடுத்து இந்திய மீனவக்குடும்பம் இன்று யாழிற்கு வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
21 Dec 2025