2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் உயர்வடைய உதவுமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 12 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வடபகுதி மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் உதவியளிக்க முன்வரவேண்டுமென வடமாகாண கடற்றொழில் சமாசத் தலைவர் எஸ்.தவரெட்ணம் இன்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்தள்ளார்.

அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டவை வருமாறு,

வடபகுதி மீனவக் குடும்பங்களில் பெரும்பாலனவர்கள் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அன்றாடம் தொழிலுக்கு சென்று அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு பிழைப்பு நடத்துகின்றனர். அவர்களுடைய வாழ்வாதாரத்தை  முன்னேற்றுவதற்கான எந்தவித நடவடிக்கையும் இந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை.

யுத்தம் தந்த பாதிப்புக்களிலிருந்து மீண்டு வரும் எமது மீனவர்களின் பாரம்பரிய தொழில் உபகரணங்களும் தொழில் வளங்களும் இந்திய மீனவர்களின் வடகடல் ஊடுருவலினால் அழிக்கப்படுகிறது.

இதனைத் தடுத்து நிறுத்துவதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென்பது மிகவும் வருந்தக்கூடிய விடயமாகும்.
இந்த நிலையில், மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் முன்வர வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .