2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வலி. வடக்கில் மீள்குடியேறிய மக்களின் அடிப்படை வசதி தொடர்பில் கலந்துரையாடல்

A.P.Mathan   / 2011 ஏப்ரல் 13 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

யாழ். வலிகாமம் வடக்கில் பன்னாலை, வித்தகபுரம், மாவி கலட்டி, உள்ளிட்ட பல கிராமங்களில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் பல்வேறு அடிப்படை தேவைகள் பூர்த்தி பண்ணப்படாதுள்ளமை குறித்து யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோனை அவரது அமைச்சில் நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறிப்பாக ஜே 223, 225 கிராம அதிகாரிப் பிரிவுகளில் மீள்குடியேறியுள்ள மக்களுக்கான மலசலகூட வசதியின்மை மற்றும் குடிநீர் பிரச்சினைகள் குறித்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் கூறினார்.

இக்கிராமப் பகுதிகளில் வாழும் மக்களில் 90 சதவீதமானவர்கள் விவசாயத்தை நம்பி வாழ்பவர்கள் எனவும் இவர்களின் விவசாய மேம்பாடுகளுக்கான தண்ணீர் பம்பிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் - அமைச்சரிடத்தில் வேண்டுகோளினையும் விடுத்தார்.

அவ்விடயங்கள் குறித்து உரிய கவனம் செலுத்துவதாக அமைச்சர் குணரத்ன வீரகோன் தன்னிடம் தெரிவித்ததாகவும் மலசல கூடங்களை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X