2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பரீட்சை பெறுபேறுகள் கிடைக்காத மாணவர்களின் பெறுபேறுகளை பெற நடவடிக்கை

A.P.Mathan   / 2011 ஏப்ரல் 13 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

வடபகுதியில் கடந்த 2010 க.பொ.தராதரப் பத்திர சாதாரணதர பரீட்சையில் தோற்றி பெறுபேறுகள் கிட்டாத மாணவர்களுக்கான பெறுபேறுகளை வழங்குவதற்கான சிறப்பு ஏற்பாட்டினை இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் செய்துள்ளது.

கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நேரடியாக சம்பந்தப்பட்ட மாணவர்களைச் சந்தித்து விசாரணைகளைச் செய்து, பெறுபேறுகளைப் பெறுவதற்கு பரீட்சைத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த மாத இறுதிப் பகுதியில் குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி கிளிநொச்சியிலும் 28ஆம் திகதி யாழ்ப்பாணம் வடமராட்சியிலும் 29ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் பரீட்சைத் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொள்வர்.

2010 டிசெம்பரில் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் தோற்றும்போது தேசிய அடையாள அட்டை இல்லாது தபால் அடையாள அட்டையிலும் புகைப்படங்களை உறுதிப்படுத்தியும் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான பெறுபேறுகள் அடையாள அட்டையை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த நடமாடும் செயலணி மேற்கொள்ளப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களுடைய பிரச்சினைகளை நேரில் தெரிவித்து நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .