2025 ஜூலை 05, சனிக்கிழமை

யாழ். குடாநாட்டில் தற்கொலைகள் அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 15 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் தற்கொலை செய்தவர்களின் தொகை அதிகரித்துக் காணப்படுவதாக யாழ். போதனா வைத்தியசாலை உளநல சிகிச்சைப் பிரிவு இன்று ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பரீட்சையில் சித்தியடையாமை, இளவயதில் ஏற்படும் காதல்த் தோல்விகள், அதிகரித்த குடும்ப வன்முறைகள், குடும்ப வறுமை, அநாதரவான நிலைமை போன்ற காரணிகளால் குடாநாட்டில் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது.

இதனைக் கட்டுப்படுத்துவதற்கு வெளிநாடுகளிலிருந்து உளநல மருத்துவ சிகிச்சையாளர்கள் வரவழைக்கப்பட்டு பாடசாலை மட்டத்திலிருந்து பல்கலைக்கழகம் வரை அவர்களுக்கான உளநல ஆற்றுப்படுத்தல் நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0

  • niranjala thaya Friday, 15 April 2011 08:41 PM

    புலம் பெயர் தமிழர்கள் இவர்களுக்கு எப்படி உதவலாம் என்று தெரிவிக்கவும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .