2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

காணாமல் போன குடும்பஸ்தர் வீடு திரும்பியுள்ளார்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 15 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

மாதகலிலிருந்து கொழும்பு செல்வதாகக் கூறிச் சென்று காணாமல் போனதாக கூறப்பட்ட இளம் குடும்பஸ்தர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

மாதகலைச் சேர்ந்த துரைராசா இராஜேந்திரமோகன் (வயது 34) என்பவர் கடந்த மாதம் காணாமல் போன நிலையிலேயே பத்து நாட்களின் பின்னர் மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.

இவர் காணாமல் போனது சம்பந்தமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட அலுவலகம் மற்றும் இளவாலைப் பொலிஸிலும் உறவினர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X