Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 16 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். இளவாலைப் பகுதியில் தன்னை காதலிக்க மறுத்த இளம் யுவதியின் முகத்தில் அசிட் ஊத்திய காதலன் தலைமறைவாகியுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு இளவாலையிலுள்ள யுவதியின் வீட்டுக்குச் சென்ற மேற்படி காதலன் அப்பெண்ணின் முகத்தில் அசிட் ஊத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளார்.
ஏ.லொறின் கொன்சென்ற் (வயது 25) என்பவரே அசிட் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரஸ்தாப யுவதியின் உடம்பின் பல பகுதிகளிலும் அசிட் தாக்கத்தினால் எரிகாயங்கள் காணப்படுவதாக யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் குறித்து யுவதியின் பெற்றோரால் இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், காதலனைத் தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago