2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

யாழில் டெங்குநோய் பரவலாக்கம் அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 16 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (கவிசுகி)

யாழ். குடாநாட்டில் டெங்குநோய் பரவும் வேகம் அதிகரித்துக் காணப்படுவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் டெங்குநோய் தடுப்புப்பிரிவு இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றங்கள் காரணமாக யாழ்ப்பாணத்தில் பருவப்பெயர்ச்சி மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இந்;த நிலையில், நுளம்புப்பெருக்கம் அதிகரித்துள்ளதால் குடாநாட்டில் டெங்குநோய்த்தொற்று அதிகரித்தள்ளதாக டெங்குநோய் தடுப்புப்பிரிவு குறிப்பிட்டது.

டெங்குநோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட வழிமுறைகள் யாழ். குடாநாட்டில்  போதுமானதாக காணப்படவில்லை. டெங்குநோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலை டெங்குநோய் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ். மக்களை டெங்குநோய்த் தொற்றுக்களிலிருந்து பாதுகாப்பதற்கு  அனைவரதும் ஒத்துழைப்பை தாங்கள் எதிர்பார்ப்பதுடன், டெங்குநோய்  பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த சமூக நிறுவனங்கள் முன்வரவேண்டுமெனவும் யாழ். போதனா வைத்தியசாலை டெங்குநோய் தடுப்புப்பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .