2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

யாழ். குடாக்கடல் நீரேரிப்பகுதியில் அதிகளவான கடல் அட்டைகள்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 16 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாக்கடல் நீரேரிப் பகுதியில் அதிகளவான கடல் அட்டைகள் பிடிக்கப்பட்டு வருவதாக யாழ். குடாப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடத்தை விட இந்த வருடம் கடல்  அட்டையின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதாகவும் இதனால் பெருமளவில் கடல் அட்டைகள் பிடிக்கப்பட்டு வருவதாகவும்  இம்மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கடல் அட்டையொன்று 300 ரூபாய் முதல் கொண்டு 1,200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதுடன்,  தென்பகுதி மீனவ வர்த்தகர்களினால்; கடல் அட்டைகள் அதிகளவில் கொழும்புக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடல் அட்டை பிடிபடும் காலம் ஆரம்பித்துள்ளதினால் யாழ். குடாக்கடல் மீனவர்கள் பெருமளவில் இத்தொழிலில் ஈடுபட்டு வருவதாக வடமாகாண கடற்றொழிலாளர் சமாசத்தலைவர் எஸ்.தவரெட்ணம் தெரிவித்துள்ளார். யாழ். குடாக்கடல் மீனவர்களுக்கு இம்மாதம் தொடக்கம் எதிர்வரும் மாதம் வரை அதிகளவில் கடல் அட்டைகள் பிடிப்பதற்கான சந்தர்ப்பங்கள் கிடைத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X