Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 16 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். சிறைச்சாலையில் கைதிகளுக்கு தொற்றுநோய் பரவி வருவதாக யாழ். சிறைக்கைதிகள் தெரிவித்துள்ளனர். யாழ். சிறைச்சாலையில் அதிகளவான கைதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளதினால் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன், இதனால் கைதிகளுக்கு தொற்றுநோய் பரவி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கைதிகளை சந்திப்பதற்காக இன்று சனிக்கிழமை சென்ற உறவினர்களிடமே அவர்கள் இதனைக் கூறியுள்ளனர்.
ஒரு அறையில் 200 வரையான கைதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனால் தொற்றுநோய்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாகவுள்ளன. அனேகமான கைதிகளுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அக்கைதிகள் தெரிவித்தனர்.
இந்த கைதிகளின் நிலைமைகள் தொடர்பாக கைதிகளின் உறவினர்களினால் யாழ். சிறைச்சாலை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதாக தெரியவருகிறது.
1 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
21 Dec 2025