2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சங்குப்பிட்டி கடலில் காணாமல்போன மாணவன் சடலமாக மீட்பு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 17 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். கேரதீவு - சங்குப்பிட்டி கடலில் குளித்துக்கொண்டிருந்தவேளையில் காணாமல் போன  மாணவன் நேற்று சனிக்கிழமை மாலை மீனவர்களினால் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தில் தரம் - 9இல் கல்வி கற்கும் ஸ்ரீகாந் நிமலன் (வயது 14) என்ற மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரத்தியேக வகுப்புக்களை நடத்தும் ஆசிரியர் ஒருவருடன் கல்விச் சுற்றுலாவுக்கு சென்றிருந்த மேற்படி மாணவன்,  கேரதீவு – சங்குப்பிட்டிக் கடலில் குளித்துக்கொண்டிருந்த வேளையில் காணாமல் போனமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X