Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 18 , மு.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
வயிற்றுவலி காரணமாக அதிகளவான மாத்திரைகளை உட்கொண்ட இளம் பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார்.
மிருசுவில் கெற்பலியைச் சேர்ந்த சின்னத்துரை விஜயமாலினி (வயது 24) என்ற இளம் பெண்ணே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
கடந்த சனிக்கிழமை காலை சாவகச்சேரி வைத்தியசாலையில் வயிற்றுவலிக்கு சிகிச்சை பெற்றுச் சென்ற இப்பெண் மருந்து உட்கொண்ட பின்னரும் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். இதனையடுத்து, வைத்தியசாலையில் வழங்கப்பட்ட அனைத்து மாத்திரைகளையும் ஒரேயடியாக உட்கொண்டுள்ளார். பிற்பகல் வேளையில் கடுமையான வயிற்றுவலி காரணமாக உபாதைக்குட்பட்ட இப்பெண்ணை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் மரணமடைந்துள்ளார்.
சடலம் மரண விசாரணைக்காக சாவகச்சேரி வைத்திசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025