2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

குளவி கொட்டிய இருவர் வைத்தியசாலையில் அனுமதி

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 18 , மு.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

தென்மராட்சிப் பகுதியில் குளவி கொட்டியதில் இருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கொழும்பிலிருந்து வந்த நபரொருவர் தென்மராட்சிப் பகுதியிலுள்ள வீட்டை பார்வையிடச் சென்றபோது பற்றைக்குள்ளிருந்த குளவி கொட்டியதில் 31 வயதான பௌசிகா என்ற பெண் காயமடைந்துள்ளார்.

இதேவேளை, கொடிகாமப் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மரத்திலிருந்து விழுந்த பனையோலையை எடுக்கச் சென்றபோது  ஓலைக்குள்ளிருந்த குளவி கொட்டியதில் அவர் காயமடைந்துள்ளான்.  இவர்கள் இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X