2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தோட்டக்காணியிலிருந்து எரிந்த சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 18 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி,தாஸ்,கிரிசன்)

யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்குப் பகுதியிலுள்ள தோட்டக்காணியொன்றிலிருந்து எரிந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டு இன்று திங்கட்கிழமை அதிகாலை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  

தோட்டக்காணியில் எரிந்த நிலையில் சடலம் காணப்படுவதை அறிந்த அயலவர்கள், சுன்னாகம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வைத்தியலிங்கம் செல்வகணேசன் (வயது 42) என்பரது சடலமென உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

குறித்த சடலம் ரயர் போட்டு எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.  இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையாக இருக்கலாமென சுன்னாகம் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இச்சடலத்திற்கு அருகில் அவரது தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X