2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

யாழில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 18 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் இந்த வருடம் முதல் 3 மாதங்களில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள், வன்முறைகள் மற்றும் சிறுவர் உரிமை மீறல்ச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதாக யாழ். மாவட்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு அமைப்பு இன்று அறிவித்துள்ளது.

சிறுவர்கள் தங்களது உரிமைகளை மீறுவதில்  பெற்றோர்களும் உறவினர்களும் ஈடுபட்டுள்ளதாக நடத்தப்பட்ட ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளது. சிறுவர்களை பாலியல் ரீதியாக அணுகுவது அவர்களது அடிப்படை உரிமை செயற்பாடுகளை மீறி செயற்படும் சம்பவங்கள்  யாழ். குடாநாட்டில் அதிகரித்து செல்கிறது.

அத்துடன், சிறுவர் உரிமையை பாதுகாப்பதற்காக மேலும் பல செயற்றிட்டங்களை      நடைமுறைப்படுத்துவதற்கான செயல் ஊக்கங்களையும் உடனடியாக மேற்கொள்ளவுள்ளதாக யாழ். மாவட்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கடந்த வருடத்தை விட இவ்வருடம் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் குறைந்த அளவிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X