2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் த.தே.கூட்டமைப்பு எம்.பி.கள்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 18 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

நாளையதினம் நடைபெறவுள்ள யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த  நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கலந்துகொள்ளவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற  உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

தன்னுடன் சேர்த்து  அப்பாத்துரை விநாயகமூர்த்தி, ஈஸ்வரபவன் சரவணபவன் ஆகியோர் இந்த அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார். ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டில் இல்லாத காரணத்தினால் கலந்துகொள்ளமாட்டார்களெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ். மக்களினுடைய அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிப்பதினால் கட்டாயமாக தான் இந்த அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் இதனால் இன்றிரவு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புறப்படவுள்ளதாகவும்  ஐ.தே.கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன்  தமிழ்மிரருக்கு திருமதி மகேஸ்வரன் விஜயகலா தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .