2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கத்திவெட்டுக்கு இலக்கான நபர் மரணம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 19 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (கிரிசன்)

கத்தி வெட்டி படுகாயங்களுக்குள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை மரணமடைந்துள்ளார்.

மல்லாகம் சோடாக் கம்பனி வீதியில் தற்காலிகமாக வசித்த  இரத்தினம் என்பவரே கத்திக்வெட்டுக்குள்ளான நிலையில் மரணமடைந்தவர் ஆவர்.  

யாழ். பன்னாலைப் பகுதியில் கடந்த  ஞாயிற்றுக்கிழமை உறவினர்களுக்கிடையே காணிப் பிரச்சினையில் ஏற்பட்ட  பிணக்கு வாய்த்தர்க்கமாக மாறி கத்திவெட்டில் முடிவடைந்தது.மேற்படி நபர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். 

இந்த சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X