Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 19 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
கிளிநொச்சி மாவட்டத்திற்கான அபிவிருத்திகுழுக் கூட்டம் கிளிநொச்சி மாவட்டத்திலேயே நடத்தப்பட வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ். செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோதே கூட்டமைப்பினர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.
ஒவ்வொரு மாவட்டத்திற்கான அபிவிருத்திக்குழுக் கூட்டமும் அந்தந்த மாவட்டத்திலேயே நடைபெறுவது வழமையாகும். ஆனால், யாழ். மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி பற்றி ஆராயப்படுவது ஏன் என்று கூட்டமைப்பினர் கேள்வியெழுப்பினர்.
கூட்டமைப்பினரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத் தலைவரும் டக்ளஸ் தேவானந்தா, இனிவரும் காலங்களில் கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்திக்குழுக் கூட்டம் அந்த மாவட்டத்தில் நடத்துவது குறித்து தான் ஆலோசிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் நான்கு மாடிக் கட்டடம் கட்டுவதற்கு 2006ஆம் ஆண்டு ஜப்பான் நிதியுதவியுடன் ஏக்கா திட்டத்தின் கீழ் ஒப்பந்தம் செய்யப்பட்டபோதிலும், அங்கு 3 மாடிக் கட்டடம் கட்டப்படுவது குறித்து கூட்டமைப்பினர் கேள்வியெழுப்பினர்.
இக்கூட்டத்தில் கிராமிய அபிவிருத்தி திட்டங்கள், வீதி அபிவிருத்தி, புனரமைப்புப் பணிகள், கைத்தொழில் அபிவிருத்தி, கட்டுமாணப் பணிகள் குறித்தும் அதன் குறைநிறைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
9 hours ago