2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

யாழில் வெப்பநிலை குறைவடையும்: வளிமண்டலவியல் திணைக்களம்

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 19 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

காலநிலை மாற்றங்கள் காரணமாகவும் சூரிய உச்சம் காரணமாகவும்  அதிகரித்திருந்த வெப்பநிலை தொடர்ந்து படிப்படியாகக் குறையும் என திருநெல்வேலி வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவதானிப்பாளர் எஸ்.பிரதீபன் தெரிவித்தார்.

சூரியன் உச்சம் பெற்றிருந்ததால் கடந்தமாதம் 35.2 பாகை செல்சியஸ் வெப்பநிலை காணப்பட்டதாகவும், தற்போது அந்த வெப்பநிலை குறைவடைந்து செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பருவக்காற்று தொடங்கியுள்ளதால் இனி வெப்பம் குறைவடைந்து செல்லும் சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X