Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 20 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக உடற்கல்வி விஞ்ஞான அலகின் ஏற்பாட்டில் 'ஆயுளுக்கான சுகாதாரமும் திடகாத்திரமும்' என்னும் விடயம் தொடர்பான இரு நாள் பயிற்சிப்பட்டறையின் இறுதி நாள் நிகழ்வுகளும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நாளை வியாழக்கிழமை பிற்பகல் 3.45 மணிக்கு நடைபெறவுள்ளன.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் உடற்கல்வி விஞ்ஞான அலகின் இணைப்பாளர் பேராசிரியர் எம்.நடராஜசுந்தரம் தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்தினம், சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழக உடற்கல்வி திணைக்களத் தலைவர் கே.கணேசநாதன் கலந்துகொள்ளவுள்ளனர்.
பயிற்சிகளை இந்தியாவிலிருந்து வந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக உடற்கல்வி மற்றும் விளையாட்டு விஞ்ஞான அலகின் பேராசிரியர் வி.கோபிநாத், கலாநிதி எம்.இளையராஜா ஆகியோர் வழங்கினார்கள்.
இப்பயிற்சிக் கருத்தரங்கில் யாழ். மாவட்ட விளையாட்டு அலுவலர்கள், பயிற்றுவிப்பாளர்கள், பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வைத் தொடர்ந்து கலை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
8 hours ago