Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஏப்ரல் 20 , மு.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணத்தில் பின்தங்கிய கிராமங்களில் பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவிகள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர் என்று யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அ.வேதநாயகம் தெரிவித்தார்.
இதனால், யாழ்ப்பாணத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை மீண்டும் தலைதுக்கியுள்ளதாக நல்லூர் பிரதேச செயலக மகளிர் தின விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போது மேற்படி கல்விப் பணிப்பாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'பொறாமைமிக்க ஆண்வர்கங்களினால் பின்தங்கிய கிராமப்புற பெண்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஆண்வர்கத்திற்கு எதிராக போராடும் குணங்களை பெண்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இத்தோடு பாதிக்கப்படும் பெண்கள் உடனடியாக சட்டத்தை நாடி தங்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும்' எனவும் தெரிவித்தார்.
அத்துடன் 'பாடசாலைகளில் பெண்பிள்ளைகள் பின்தங்கிய கிராமங்களில் மிகவும் துன்புறுத்தல்களுகக்கு உட்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் அவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
8 hours ago