Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 20 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 50 ஆயிரம் வீட்டுத் திட்டப் பணிகளை விரைவாக ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 50 ஆயிரம் வீட்டுத் திட்டம் ஏன் இடைநிறுத்தப்பட்டுள்ளதென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி கேள்வியெழுப்பியதுடன், இந்திய அரசாங்கத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்காக வழங்கப்பட்ட உழவு இயந்திரங்களில் சில தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.
சில தமிழ் அரசியல் தலைவர்களின் தலையீடு காரணமாக இந்திய வீட்டுத் திட்டப் பணிகள் இடைநிறுத்தப்பட்டது. தற்போது இந்த வீட்டுத் திட்டப் பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடமாகாண விவசாயிகளுக்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 500 உழவு இயந்திரங்களும் யுத்த பாதிப்பிற்குள்ளான விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் அனைத்தும் தென்னிலங்கைக்குக் கொண்டு செல்லப்படவில்லையென்றும் இவ்வாறு கூறப்படும் செய்தி உண்மைக்குப் புறம்பானதென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
8 hours ago