2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

அறிவுசார் சொத்துரிமைகளின் பொருளாதாரத் தோற்ற விரிவுரை

Super User   / 2011 ஏப்ரல் 20 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். சமூக செயற்பாட்டு மையத்தில் அமைந்துள்ள அமெரிக்க தகவல் கூடத்தில் "அறிவுசார் சொத்துரிமைகளின் பொருளாதாரத் தோற்றம்" எனும் தொனிப்பொருளில் பொது விரிவுரையொன்று எதிர்வரும் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு டிஜிடல் வீடியோ மாநாடு (டிவிசி) மூலம் நடைபெறவுள்ளது.

இதில். வுளவாளராக இலங்கை தேசிய அறிவுசார் சொத்துக்களின் பணிப்பாளர் காலநிதி டி.எம். கருணாரத்ன விரிவுரைகளை வழங்கவுள்ளார்.

இக்கலந்தாய்வரங்கில் பங்குபற்றவிரும்புகிறவர்கள் யாழ்.அமெரிக்க தகவல் கூடத்தின் இணைப்பளர் ஜெறின் கிருசாந்தினிடம் 0212220665 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

இந்த கலந்தாய்வரங்கில் சட்டத்தரணிகள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் கலந்துகொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X