2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

யாழ். பாதுகாப்பு படைகளின் மாபெரும் இசை விழா

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 20 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாதுகாப்புப் படைகளின் யாழ். கட்டளைத் தலைமையத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இசை நிகழ்ச்சியொன்று யாழ். முற்றவெளி மைதானத்தில் கடந்த ஞாயிறன்று மாலை நடைபெற்றது. தமிழ், சிங்கள இசை நிகழ்ச்சிகள் பல அங்கு நடைபெற்றன.

4 மணித்தியாலங்களாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இராணுவ இசைக்குழுவும் எஸ்.சாந்தன் தலைமையிலான அபீனா இசைக்குழுவும நிகழ்ச்சிகளை நடத்தின. இதில் இராணுவ இசைக்குழு தமிழ் பாடலொன்றையும் சாந்தனின் இசைக்குழு சிங்களப் பாடலொன்றையும் இசைத்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ்.சாந்தன் மற்றும் அபீனா இசைக்குழு அங்கத்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் கட்டாயமாக அவர்களின் படையில் சேர்க்கப்பட்டிருந்தவர்கள் எனவும் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அவர்கள் இராணுவத்தினரால் பாதுகாக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் எனவும் பாதுகாப்புப் படைகளின் யாழ் கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

டான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இந்த இசை நிகழ்ச்சியில் யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, டான் தொலைக்காட்சி நிறுவனத் தலைவர் குகநாதன் மற்றும் பாதுகாப்புப் படைகள், பொலிஸ் உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .