Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 21 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வடமாகாணத்தில் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவ சமூகத்தின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளது. அவர்களின் உரிமையைப் பாதுகாப்பதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் தொழிலாளர்கள் தினமான எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி தொழிலாளர்கள்; உரிமை குறித்து முறையிடவுள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் சமாசத்தலைவர் எஸ்.தவரெட்ணம் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடங்களை விட இந்த வருடத்தில் அதிகளவான மீனவர்கள் தங்களுடைய தொழில் வளங்களை இழந்துள்ளனர். இந்திய மீனவர்களுடைய அத்துமீறிய செயற்பாடுகள் காரணமாக வருடமொன்றுக்கு 12 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வடமாகாண மீனவர்களின் கடல் வளங்கள் மற்றும் சொத்து அழிவுகளுக்கு இதுவரையில் எந்தவித நட்டஈடுகளும் வழங்கப்படவில்லை. இந்த மீனவர்களின் குடும்பங்கள் மிகவும் வறுமை நிலையில் வாழ்வதாகவும் எஸ்.தவரெட்ணம் குறிப்பிட்டார். எதிர்வரும் காலங்களில் மீனவர்களின் உரிமைகள் மீறப்படுவதை அனுமதிக்க முடியாதெனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
01 Jul 2025