2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

யாழில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 21 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

பெண்கள் மீதான வன்முறைகள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துக் காணப்படுவதாக யாழ். பெண்கள் அபிவிருத்தி மையம் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குடும்ப வன்முறைகளாலும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் துஷ்பிரயோகங்களினாலும் பெண்கள் மிகவும் அவஸ்தைப்படுகின்றனர். வக்கிரத்தன்மையுடைய ஆண் வர்க்கங்களினால் பெண்களுக்கு எதிரான உரிமை மீறல்கள் யாழ்ப்பாணத்தில்  நடைபெறுகிறது. அவளுக்கு சமூகத்தில் கிடைக்கக்கூடிய அந்தஸ்து பெரிதும் ஆண்களினால் தடுக்கப்படுகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்கள் மீதான பாலியல் சேட்டைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள் பாடசாலை மட்டத்திலிருந்து பல்கலைக்கழகங்கள் வரை மிக இரகசியமாக அரங்கேறுகிறது. இதனால் ஆண்கள் சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்கின்றனர் என யாழ். பெண்கள் அபிவிருத்தி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .