Super User / 2011 ஏப்ரல் 23 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். போதனா வைத்திய சாலையில் அத்தியவசிய சில மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் திருமதி பவானி சத்தியராசா தெரிவித்துள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு தினமும் அதிகளவில் நோயாளர்கள் வருவதனால் கையிருப்பில் இருந்த அத்தியவசிய சில மருந்துப் பொருட்கள் தீர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் இவ்விடயம் குறித்து வடபிரந்திய சுகாதாரப் பணிப்பளர் வைத்திக் கலாநிதி எஸ். கேதிஸ்வரன் கவனத்திற்கு கொண்டு வந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.மாவட்ட அரச வைத்தியசாலைகளில் சிகிச்சைகளின் போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகளும் மற்றும் சில மருந்து வகைகளுக்கே தட்டப்பாடு நிலவுவதாக தெரிவித்த அவர், இன்னும் சில காலங்களில் இம் மருந்துப் பொருட்கள் கொழும்பு அரச மருந்துக் கூட்டுஸ்தாபனத்தில் இருந்து கொண்டுவருவதாற்காக சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் எந்தவிதமான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடுகள் நிலவுகின்றது என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago