2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கொய்யாத்தோட்ட வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் இருவர் கைது

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 25 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். சுண்டிக்குளி கொய்யாத்தோட்டப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் இருவர் இன்று திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொய்யாத்தோட்டப் பகுதியைச் சேர்ந்தவர்களான இன்பநாதன் கபிரியற்பிள்ளை (வயது 39), இன்பநாதன் ஜெயசுதா (வயது 33), அந்தோணிப்பிள்ளை அமுதசீலி (வயது 55), அந்தோணிப்பிள்ளை ஜெனிஸ்ரன் (வயது 24) ஆகியோரே கடுமையான வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்கள் யாழ். பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து, இந்த இருவரும் கொய்யாத்தோட்டப் பகுதியில் மறைந்திருந்தபோது கைதுசெய்யப்பட்டனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை       அயலவர்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் கைகலப்பாக மாறி வாள்வெட்டில் முடிவடைந்தது.

இவர்கள் இச்சம்பவத்திற்கு வாகனமொன்றை பயன்படுத்தியதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X