Menaka Mookandi / 2011 ஏப்ரல் 26 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தோட்டங்களில் வைக்கப்பட்ட மரக்கறிவகைகள் பழுதடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இறுதியிலும் யாழ்ப்பாணத்தில் பெய்த தொடர் மழையினால் மரக்கறி வகைகள் பழுதடைந்ததுடன் பெரும் நட்டத்தையும் எதிர்நோக்கினார்கள். அந்த வகையில் தற்போதும் தொடர்ந்து பெய்யும் மழையினால் தமது மரக்கறிக் கன்றுகள் அழியும் நிலமையை எதிர்நோக்கியுள்ளதாக கவலையுடன் தெரிவிக்கின்றார்கள்.
தென்பகுதியில் மரக்கறிச் செய்கையாளர்கள் பயிர்களுக்கு காப்புறுதி செய்து இத்தகைய இயற்கை அழிவுகளின்போது நட்டஈட்டைப் பெற்றுக்கொள்கின்ற போதிலும் வடபகுதி செய்கையாளர்கள் காப்புறுதி விடயத்தில் பின்னிற்பதினால் இத்தகைய அழிவுகளின்போது எந்த வகையான நட்டஈடுகளும் கிடைக்கப்பெறுவதில்லையென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago