Menaka Mookandi / 2011 ஏப்ரல் 26 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். குடாநாட்டில் அண்மையில் பெய்துவரும் மழையினால் மீளக்குடியேறிய வலிகாமம் வடக்குப் பகுதி மக்களின் தற்காலிக கூடாரங்களுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அப்பகுதி குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நீண்டகாலத்திற்குப் பின்னர் இந்தப்பகுதியில் மக்கள் மீள்குடியேறியுள்ளதினால் மக்களின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டுள்ள நிலையில், மீள்குடியேறிய மக்கள் தற்காலிக கூடாரங்களில் தங்கியுள்ளனர். இக்கூடாரங்களுக்குள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளதினால் அவர்கள் தற்போது அருகில் உள்ள கோவில்களில் தங்கியுள்ளனர்.
மீள்குடியேறிய மக்களுக்கு பல்வேறு தரப்பினரால் உதவிகள் செய்யப்பட்டு வருகின்ற நிலையிலும் அவர்கள் தங்குவதற்குரிய நடவடிக்கைகளுக்கு இதுவரை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago