2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

யாழ். முஸ்லிம் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 26 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்பாணத்தில் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம் மக்களுக்கான நிவாரணம், நிதி, வீட்டுத்திட்ட உதவிகள் போன்றன அரச சாற்பற்ற நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. விரைவில் அவர்களுக்காக நிவாரண உதவிகள் வழங்கப்படும் என யாழ். பிரதேச செயலாளர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரம் தெரிவித்துள்ளார்.

எம்.எப்.சி.டி. என்ற முஸ்லிம் தனியார் நிறுவனம் யாழ். முஸ்லிம் மக்களுக்காக 10 வீடுகளையும் 10 சிதைவடைந்த வீடுகளை புனரமைப்பு செய்வதற்கு முன்வந்துள்ளது. யாழ். பொம்மைவெளிப் பகுதி முஸ்லிம் மக்களுக்காக பல அபிவிருத்தித் திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாவும் அவர் தெரிவித்தள்ளார்.

அம்மக்கள் கடந்த மார்ச் மாதம் மேற்கொண்டுவந்த உண்ணாவிரத்தின் போது அவர்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளுக்கு இணங்க யாழ்.பொம்மைவெளி முஸ்லிம் மக்களது அடிப்படைப் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வுகாணப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X