2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மின்னல் தாக்கி வயோதிபர் பலி

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 28 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். ஊர்காவற்றுறை மூன்றாம் கட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் மின்னல் மற்றும் இடி வீழ்ந்ததில் வயோதிபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

எஸ்.முடியப்பு (வயது 72) என்பவரே இவ்வாறு மின்னல், இடி தாக்கி பலியானவர் ஆவர்.

அத்துடன், இந்த இடி, மின்னல் தாக்கத்தில் குறித்த வீடும் சேதமடைந்துள்ளது.

இவரது சடலம் தற்போது ஊர்காவற்றுறை அரசினர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் இன்று அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய கடும் மழை பெய்த வண்ணமுள்ளன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X