Menaka Mookandi / 2011 ஏப்ரல் 28 , மு.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேமந்த்)
வடமராட்சி கிழக்கில் உள்ள மருதங்கேணி மருத்துவமனை இயங்கமுடியாத நிலையில் உள்ளது. போரினால் சிதைவடைந்த மருத்துவமனையின் மீள் நிர்மாணப் பணிகள் இன்னும் மேற்கொள்ளப்படாமையினால், இந்தப் பிரதேச மக்கள் தமக்கான மருத்துவ உதவிகளைப் பெறுவதில் பெரும் இடர்களைச் சந்தித்துள்ளனர்.
மருதங்கேணி, தாளையடி, ஆழியவளை, உடுத்துறை, வெற்றிலைக்கேணி, வத்திராயன், செம்பியன்பற்று ஆகிய பிரதேசங்களுக்கு இந்த மருத்துவமனையே மையமாக இருக்கின்றது.
ஆனால், இந்த மருத்துவமனைக்கான நிரந்தர மருத்தவரும் தற்போதில்லை. போதிய கட்டிட வசதிகளும் இப்போதில்லை. இதன் காரணமாக நோயாளிகள் மிகத் தொலைவிலுள்ள மந்திகை அல்லது சாவகச்சேரி மருத்துவமனைகளுக்கே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago