Kogilavani / 2011 ஏப்ரல் 30 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்.போதனா வைத்தியசாலையில்; சவச்சாலையில் இருக்கும் குளிருட்டிகள் பழுதடைந்துள்ளதால் அங்குள்ள சடலங்கள் பழுதடைவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி பாவானி பசுபதிராஜா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு சவச்சாலை குளிரூட்டிகள் திருத்துவதற்கான நடவடிக்கை எதிர் வரும் வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
சவச்சாலையில் உள்ள குளிரூட்டிகளைத்திருத்துவதற்கு 20 இலட்சம் ரூபா செலவாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே தடவையில் மூன்று சடலங்களை பழுதடையாமல் பாதுகாக்கும் புதிய குளிரூட்டிகளின் கொள்வனவுக்காக சுகாதார அமைச்சுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் சுகாதார அமைச்சிடம் இருந்து பதில் கிடைத்ததும் பாரிய குளிரூட்டிகள் கொள்வனவு செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago