2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

யாழ்.வலிகாமம் வடக்கில் கேபள் தொலைபேசி இணைப்புக்கள்

Kogilavani   / 2011 ஏப்ரல் 30 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
யாழ்.மாவட்டத்தில் சகலருக்கும் கேபள் தொலைபேசி வழங்கும் திட்டத்தில் வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேசத்துக்கும் கேபள் தொலைபேசி இணைப்பு வழங்கப்படவுள்ளதாக இலங்கை ரெலிகொம் நிறுவனத்தின் யாழ்.கிளை அறிவித்துள்ளது.

மல்லாகம் சந்திவரை ரெலிகொம் கேபள் இணைப்பை விஸ்தரித்துள்ள நிலையில் தற்போது தெல்லிப்பளை வரையான பகுதிக்கும் கேபள் தொலைபேசி இணைப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுன்னாகம் தொலைத்தொடர்பு பரிவர்த்தனை நிலையம் ஊடாக இப்பிரதேசத்துக்கு 1000 தொலைபேசி இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை ரெலிகொம் நிறுவனத்தின் யாழ்.கிளை மேலும் தெரிவித்துள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X